கடலூர்: 12-ம் வகுப்பு மாணவனும், மாணவியும் பள்ளிக்குள் விஷமருந்தி தற்கொலை

 
student suicide

கடலூரில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவனும் மாணவியும் பள்ளிக்குள்ளையே விஷம் அருந்தியது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

கடலூர் கிழக்கு ராமாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிற்பகல் 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் விஷம் குடித்ததாக உடன் இருந்த மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர் அதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அந்த மாணவனை மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் அதே வகுப்பில் படிக்கும் மாணவி ஒருவரும் விஷம் குடித்ததாக தகவல் வெளியானது. 

இதனை கேட்ட அந்த பள்ளி தலைமை ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார். அதனைத் தொடர்ந்து அந்த மாணவன் மற்றும் மாணவியை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் மாணவி இருவரும் எலி மருந்தினை தண்ணீரில் கலந்து குடித்தது தெரியவந்தது. இதற்காக போலீசார் முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்ட போது மாணவனும் மாணவியும் காதலித்து வந்ததாகவும், மாணவி தனக்கு தோல் வியாதி இருப்பதால் முகத்தில் கருப்பு புள்ளிகள் ஏற்படுவதாக தெரிவித்து அதனால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த மாணவன் நீ இறப்பதற்கு முன்பே நான் இறந்து விடுகிறேன் எனக்கூறி எறும்பு மருந்தை வாங்கி குடித்தது தெரியவந்துள்ளது. அதனை அறிந்த மாணவி, மாணவன் பையில் மீதி இருந்த எறும்பு மருந்தினை தண்ணீரில் கலந்து குடித்ததாகவும் தெரியவந்துள்ளது. 

இது குறித்து கடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில் மாணவன் மற்றும் மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருவரும் தற்போது நல்ல முறையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு பள்ளியில் மாணவன் மற்றும் மாணவி வகுப்பறையிலேயே தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.