தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!

 
school

தமிழ்நாடு முழுவதும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  இன்று தொடங்குகிறது.

school

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது.  12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. 3,081 தேர்வு மையங்களில் 3,91,343 மாணவர்கள், 4,31,341 மாணவிகள் என மொத்தம் 8,22,684 பேர் தேர்வை எழுதுகின்றனர். தேர்வு காரணமாக மாணவர்கள் காலை 9.45 மணிக்குள் தேர்வறையில் இருக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

exam

பொதுத்தேர்வு எழுதும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் காலை 9.45 மணிக்கு தேர்வு அறைக்குள் செல்ல வேண்டும். காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி வழங்கப்படும்.பிற்பகல் 1.10 மணிக்கு எச்சரிக்கை மணி அடிக்கப்படும் போது விடைத்தாள்களை நூல் கொண்டு கட்டவேண்டும் என்றும் பிற்பகல் 1.15 மணிக்கு தேர்வு நிறைவு பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே 28ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ள நிலையில் நாளை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.