+2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம் - 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுதுகின்றனர்!!

 
school

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்கவுள்ளது. 

கொரோனா  பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு என்பது நடத்தப்படாமல் இருந்தது . இதனால் காலாண்டு , அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டு வந்தது.  அத்துடன் நேரடி வகுப்புகள் இல்லாமல் ஆன்லைன் வகுப்புகள் வழியே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. 

schools open

இதையடுத்து கொரோனா  குறைந்து வந்த நிலையில் மீண்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டன. அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகள் போல் இல்லாமல் இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு எடுத்தது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. நாளை தொடங்கும் பொது தேர்வு மே 28ம் தேதி வரை நடைபெற உள்ளது.  3,119 மையங்களில் நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவர்கள் எழுத உள்ளனர்.

School Education

பொதுத்தேர்வை மூன்று லட்சத்து 91 ஆயிரத்து 343 மாணவர்களும்,  4 லட்சத்து 31 ஆயிரத்து 341 மாணவிகளும் எழுத உள்ளனர். இதேபோல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரையிலும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு,  10ம் தேதி தொடங்கி  31ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது. பொதுத்தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து செல்வது கட்டாயமில்லை; பாதுகாப்பு கருதி அணிந்து செல்லலாம். மே 5ம் தேதி தேர்வு எழுத கூடிய மாணவர்களுக்கு வாழ்த்துகள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.