விடுதியில் 7ம் வகுப்பு மாணவரை கடுமையாக தாக்கிய 12ம் வகுப்பு மாணவர்கள்!
இராமநாதபுரத்தில் செயல்பட்டு வரும் சமூக நீதி மாணவர் விடுதியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவரின் ரெக்கார்டு நோட்டை(Record Note) கிழித்ததால் ஏழாவது படிக்கும் மாணவரை பனிரெண்டாவது படிக்கும் மாணவர்கள் மூவர் சேர்ந்து தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராமநாதபுரம் சேதுபதி நகர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் பள்ளியில் படிக்கும் அனைத்து சமூதாயாத்தை சேர்ந்த 50 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு சமூக நீதி விடுதியில் தங்கி படிக்கும் மதுரையைச் சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் 12 ஆம் வகுப்பு மாணவரின் ரெக்கார்டு நோட்டை கிழித்ததால் ஆத்திரம் அடைந்த 12 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் என மூவர் இணைந்து ஏழாம் வகுப்பு மாணவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த விடுதி காப்பாளர் 11ந் தேதி காலை மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் விடுதிக்கு வந்த மாவட்ட மாணவர் குழந்தைகள் நல அலுவலர்கள் நான்கு பேரிடமும் விசாரணை நடத்தினர். அப்போது ரெக்கார்ட் நோட்டை கிழித்ததால் கோபத்தில் ஏழாம் வகுப்பு மாணவரை அடித்தது விசாரணையில் உறுதியானது. இதனியடையே தாக்குதலிக்கு உள்ளான ஏழாம் வகுப்பு மாணவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் (போயர்) என்பதாலும் தாக்கிய மூவரிம் மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏழாம் வகுப்பு மாணவரை சமுதாய ரீதியாக பேசி தாக்கினார்களா என மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள் விசாரித்ததில் அவ்வாறு இல்லை என உறுதியானதால் தாக்கிய மற்றும் தாக்குதலுக்குள்ளான மாணவர்களின் பெற்றோரை விடுதிக்கு வரவழைத்து அவர்கள் முன் மாணவர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு நான்கு மாணவர்களையிம் விடுதியில் இருந்து நீக்கிவிட்டனர்.

இந்நிலையில் ஏழாம் வகுப்பு மாணவரை தாக்கியபோது பனிரெண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் அதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் மற்றும் சமூக நீதி விடுதி தரப்பில் எந்த புகார் அளிக்கப்படாததால் வழக்கு பதிவு ஏதும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

