#BREAKING கபடி விளையாடிய 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

 
அ

வாணியம்பாடி அருகே கபடி போட்டியின்போது மயங்கி விழுந்து பிளஸ் 2 மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பத்தூர் லாலா ஏரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவர் முகேஷ், திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற நிலையில், மாணவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முகேஷ் திம்மாம்பேட்டை அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை முரளி ஒரு விவசாயி ஆவார். பள்ளிகளுக்குகிடையேயான விளையாட்டு போட்டியின்போது, விளையாடிக்கொண்டிருந்த மாணவர் திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் முகேஷ் உயிரிழந்தது போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.