பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!
May 8, 2025, 07:50 IST1746670848909
மாணவர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்திருந்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது.
பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை இன்று [மே 8] காலை 9 மணிக்கு வெளியிடுகிறது; தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, https://results.digilocker.gov.in/ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
+2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் 14417 என்ற தகவல் மைய எண்ணை பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. எந்தக் கல்லூரியில் படிக்கலாம், எவ்வாறு விண்ணப்பிக்கலாம், கல்விக் கட்டணம், உதவித்தொகை போன்ற தகவல்களை பெறலாம். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களும் துணைத்தேர்வு தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம் என தெரிவித்துள்ளது.


