இன்று நடைபெற்ற பிளஸ் 1 தமிழ் தேர்வை 12,660 பேர் எழுதவில்லை

 
exam

தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற பிளஸ் 1 தமிழ் தேர்வை 12,660 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

exam


2022-2023 கல்வி ஆண்டிற்கான மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி வரும் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாடும் முழுவதும் நடத்தப்படும் இந்தப் பொதுத் தேர்வில் 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்களும், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகளும் 1 முன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் தேர்வு எழுதவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. தனித் தேர்வர்களை பொறுத்த வரை 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 பெண்களும், 3 மூன்றாம் பாலினத்தவர் என 5 ஆயிரத்து 338 பேர் எழுத உள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுத்த வரை 3 ஆயிரத்து 228 மாணவர்களும், 2 ஆயிரத்து 607 பெண்களும் என 5 ஆயிரத்து 835 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். சிறைவாசிகளில் 125 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

தேர்வர்களுக்காக 3 ஆயிரத்து 224 தேர்வு மையங்களும், தனித்தேர்வர்களுக்கு 132 தேர்வு மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வில் தமிழ்மொழித் தாள் தேர்வை 12,660 பேர் எழுதவில்லை என பள்ளக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  முன்னதாக தமிழ்நாட்டில் நேற்று தொடங்கிய 12-ஆம் வகுப்பு தேர்வுகளில் தமிழ் மொழிப்பாடத் தாளை  50,674 மாணவர்கள் எழுதவில்லை என்று செய்திகள் வெளியாகி இருந்தன. அதன்படி மொத்த மாணவர்களில் சுமார் 7% மாணவர்கள் தேர்வை எழுதாதது குறிப்பிடதக்கது.