தவெகவில் 120 மாவட்டச் செயலாளர்கள் நியமனம்- வெள்ளி நாணயம் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு, கட்சியின் தலைவர் விஜய், வெள்ளி நாணயம் வழங்கி உள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்களை தேர்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல்
— Sarath Ravi (@Sarath23322425) January 24, 2025
கோவை, ஈரோடு, கரூர் மற்றும் அரியலூர்
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay pic.twitter.com/ZncCtZKJuR
இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதற்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியானது. முதற்கட்டமாக 120 மாவட்டச் செயலாளர்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாவட்ட கழகச் செயலாளர், மாவட்ட கழக இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள், 10 செயற்குழு உறுப்பினர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், அரியலூர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு 120 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் புதிய நிர்வாகிகளுக்கு கட்சியினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.