அரசு விற்பனைக் கூடத்தில் இருந்த 12 ஆயிரம் நெல்மூட்டைகள் சேதம் - வேதனையில் விவசாயிகள்

தமிழ்நாட்டில் கோடை வெயில் மக்களில் வாட்டி வதைக்கிறது. கத்தரி வெயில் தொடங்கியுள்ள நிலையில் தினசரி 100 டிகிரிக்கு மேல் கொளுத்தி வருவதால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தமிழ்நாட்டில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக காற்று மழை பெய்தது.
விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கானை, கோழியனூர், வளவனூர் ,முண்டியம்பாக்கம் ,ஜானகிபுரம், அரசூர் என பரவலாக கனமழை பெய்தது. அத்துடன் செஞ்சி ,திண்டிவனம் ,வானூர் ,மரக்காணம் என பரவலாக இடி, மின்னலுடன் காற்று மழை பெய்தது. திடீர் கனமழையால் கோடை வெயிலின் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
#JUSTIN விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திடீர் மழையால் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் நெல்மூட்டைகள் சேதம்#Viluppuram #Senji #Paddy #Rain #News18TamilNadu | https://t.co/uk2cvptedP pic.twitter.com/3JH4E2UnzO
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 8, 2024
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் திடீர் மழையால் அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் நெல்மூட்டைகள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். நெல்மூட்டைகள் சேதமடைந்த நிலையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.