அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்யும்

 
சே

தமிழகத்தில் அடுத்த மூணு மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையினால் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று அதிகாலை  முதல் மதியம் வரைக்கும் தொடர்ந்து கன மழை பெய்து வந்தது.   அதன்பின்னர் மழை குறைந்தது.

ர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஆறு மணி நேரத்தில் 44 செண்டி மீட்டர் மழை கொட்டி தீர்த்து இருக்கிறது.  இந்த வரலாறு காணாத பழகினால் திரும்பிய திசை எல்லாம் வெள்ளைக்காடாக காட்சி அளிக்கிறது.   குட்டி தீவு போல மாறி இருக்கிறது  சீர்காழியும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்களும்.   இதனால்  அப்பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.  கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையினால் அதிகம் பதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.

 இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்திருக்கிறது வானிலை ஆய்வு மையம்.