பள்ளி மாணவர்களுக்கு மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை..!

 
1

பள்ளி மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் விடுமுறை இருக்கும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

ஜனவரி மாதத்தில் மொத்தம் பள்ளி மாணவர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை இருந்தது. புத்தாண்டு, பொங்கல், குடியரசுத் தினம், சனி, ஞாயிறு என விடுமுறை வரிசையாக இருந்தது. ஆனால்,  பிப்ரவரி மாதத்தில் பள்ளி மாணவர்கள் எதிர்பார்த்த விடுமுறை கிடைக்கவில்லை.   

 

இதனால், மார்ச் மாதத்தில்  எத்தனை நாட்கள் விடுமுறை வரும் என எதிர்பார்ப்பில் உள்ளனர். மார்ச் மாதத்தில் 12 நாட்கள் விடுமுறை வருகிறது. அதாவது, மார்ச் 19ஆம் தேதி  வியாழன் கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு,  மார்ச் 21ஆம் தேதி சனிக்கிழமை ரம்லான் பண்டிகை, மார்ச் 31ஆம் தேதி செவ்வாய்கிழமை மகாவீர் ஜெயந்தி என மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருகிறது.   

 

மேலும், சனி, ஞாயிறு  வார விடுமுறையும் வருகிறது. சுமார் 9 நாட்கள்  சனி, ஞாயிறு வார விடுமுறை வருகிறது.  மேலும், தெலுங்கு வருடப்பிறப்பு, ரம்லான் பண்டிகை, மகாவீர் ஜெயந்தி  என மூன்று நாட்கள் அரசு விடுமுறையை சேர்த்து 12 நாட்கள் விடுமுறை வருகிறது.    

மார்ச் மாதத்தில் மட்டும் 12 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை வருவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிப்ரவரி மாதத்தில் விடுமுறை இல்லாததால், மார்ச் மாதத்தில் வரும் 12 நாட்கள் விடுமுறையில் மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது.

இதற்கிடையில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு  மார்ச் 11ஆம் தேதி முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2ஆம் தேதி முதல் மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர்.