ஆம்பூர்: தேர்வில் தோல்வியடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை

 
fire

ஆம்பூர் அருகே தேர்வில் தோல்வியடைந்த மாணவி, பெற்றோர் கண்டித்ததால் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். 

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை | RAMANATHAPURAM NEWS YOUNG LADY SUICIDE

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அயத்தம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் எழிலரசன். இவரது இளைய மகள் மோனிஷா.இவர் ஆம்பூர் எடுத்த உமராபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு பயின்று வந்த நிலையில் பத்தாம் வகுப்பு தேர்வில் இரண்டு பாடங்களில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது. இதனால்  மோனிஷாவின்  பெற்றோர் அவரை அவ்வப்போது கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மோனிஷா விண்ணமங்கலம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் சென்று தங்கி இருந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மீண்டும் வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில் மோனிஷாவின் பெற்றோர் படிப்பை தொடர்வது குறித்து பேசி கண்டித்ததால் மனமுடைந்த மோனிஷா வீட்டில் யாரும் இல்லாதபோது மொட்டை மாடிக்கு சென்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மோனிஷாவின் உடலில் பட்டியிருந்த தீயை அனைத்தனர்.இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு  உமராபாத் காவல் துறையினர் விரைந்து சென்று உயிரிழந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


ஆம்பூர் அருகே பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.