11-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்கிட்டு போட்டு தற்கொலை

 
suicide

சிவகாசி மேற்கு பகுதி அய்யம்பட்டி கிராமம் காளியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் தம்பதியினர் கண்ணன்- கடல்மீனா. பட்டாசு  தொழிலாளிகளான இவர்கள் இருவருக்கும் பாண்டிலட்சுமி மற்றும் யோகலட்சுமி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் பாண்டிலட்சுமிக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில், யோகலட்சுமி அருகில் உள்ள ரிசர்வ்லைன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்ஒன் படித்து வந்தார். 

DPS Faridabad student dies by suicide, blames school in suicide note;  mother says bullied over sexuality | delhi news

இந்நிலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவி யோகலட்சுமி பள்ளி சீருடையுடன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பட்டாசு தொழிற்சாலை பணி முடிந்து வீடு திரும்பிய பெற்றோர் தங்களது மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அய்யம்பட்டி கிராமத்திற்கு சென்ற மாரனேரி போலீசார் மாணவியின் பிணத்தை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.  

பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மாரனேரி போலீசார் மாணவி ஏன்? தற்கொலை செய்து கொண்டார் பள்ளியில் ஏதும் பிரச்சனையா? அல்லது வேறு ஏதும் காரணம் உண்டா ?என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். தங்களது வீட்டிலோ, அல்லது பள்ளியிலோ, ஏதும் பிரச்சனை இல்லாத பட்சத்தில், தங்களது மகள் ஏன்? தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து தெரியாத நிலையில் ,மாணவியின் பெற்றோர்கள் சோகத்துடன் உள்ளனர்.