11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்!

 
school

தமிழகத்தில் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடங்கி நடைபெறுகிறது.

School Education

தமிழகத்தில்  12ஆம் வகுப்புக்கு  கடந்த மே 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 12ஆம் வகுப்புக்கு பொதுதேர்வானது  28ஆம் தேதி வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அதேபோல 10-ஆம் வகுப்புக்கு மே 6-ஆம் தேதி தொடங்கிய தேர்வு  30-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கான முடிவு ஜூன் 17ம் தேதி வெளியாகும் என்றும்  12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

school

இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்புக்கு நாளை முதல் பொதுத்தேர்வு தொடங்குகிறது. வரும்  31ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.  11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியாகிறது. இந்த தேர்வினை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 பேர் எழுதுகிறார்கள்.  4 லட்சத்து 33 ஆயிரத்து 684 மாணவர்களும், 4 லட்சத்து 50 ஆயிரத்து 198 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகளவு தேர்வு எழுத  உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 3,119 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.

நாளை தமிழ் தேர்வு நடக்கவிருக்கும் நிலையில் 12ஆம்தேதி ஆங்கிலமும், 16ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், பேசிக் எலக்ட்ரிக்கல், என்ஜினீயரிங், பேசிக் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், பேசிக் சிவில் என்ஜினீயரிங், பேசிக் ஆட்டோ மொபைல் என்ஜினீயரிங், பேசிக் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், டெக்ஸ்டெல் டெக்னாலஜி, ஆபிஸ் மேனேஜ்மெண்ட் மற்றும் செக்கரேட்டரிஷிப் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு தேர்வு நடக்கிறது. 19ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் பாடங்களும், 25ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், நியூட்ரிஷன், டெக்ஸ்டெல் மற்றும் ட்ரஸ் டிசைனிங், புட் சர்வீஸ் மேனேஜ்மெண்ட், வேளாண்மை அறிவியல், நர்சிங் (பொது), நர்சிங் (வக்கேஷனல்) ஆகிய தேர்வுகளும்,  27ஆம் தேதி கம்யுனிக்கேட்டிவ் ஆங்கிலம், எத்திக்ஸ் மற்றும் இந்தியன் கலாசாரம், கணினி அறிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ், பயோகெமிஸ்ட்ரி, அட்வான்ஸ், ஹோம் சயின்ஸ், அரசியல் அறிவியல், புள்ளியியல் பாடத் தேர்வுகளும், 31ஆம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் டெக்னாலஜி ஆகிய தேர்வர்களும் நடைபெறுகிறது.