#Breaking தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

 
tn

2022-23 ஆம் கல்வியாண்டின்  11ஆம் வகுப்பு பொது தேர்வினை  8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் எதிர்கொண்டனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

school

dge.tn.nic.in , http://tnresults.nic.in இணையதளத்தில் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

school

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.93% ஆக பதிவாகியுள்ளது.. 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 7.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 11ஆம் வகுப்பு தேர்வில் மாணவியர்கள் 3 லட்சத்து 91 ஆயிரத்து 968 பேரும்,  மாணவர்கள் 3 லட்சத்து 14 ஆயிரத்து 444 பெரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 94.36 சதவீதமாக உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 86.99 சதவீதமாக உள்ளது.