தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

 
tn

தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

tn

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில் 176 ஆராதனை விழா இன்று வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது. விழாவுக்கு புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் குத்துவிளக்கு ஏற்றி விழாவை இன்று தொடங்கி வைக்கிறார்.

இன்று தொடங்கும் ஆராதனை விழாவில் இசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன.  அத்துடன் வருகிற 11-ம் தேதி காலை 9 மணி முதல் 10:00 மணி வரை 500க்கும் மேற்பட்ட இசை கலைஞர் பங்கேற்று தியாகராஜ ஸ்வாமிக்கு பஞ்ச ரத்தின கீர்த்தனைகளை பாடி இசை அஞ்சலி செலுத்துகின்றனர் .இந்த நிகழ்வில் விருந்தினராக ஆளுநர் ரவி பங்கேற்கிறார்.

இந்நிலையில்  தியாகராஜரின் 176 ஆவது ஆராதனை விழாவை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடு செய்யும் வகையில் வேறொரு நாள் பணிநாளாக அறிவிக்கப்படும்.