வரும் 11-ம் தேதி சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

 
சிவகங்கை: ராணுவ வீரர் அம்மா, மனைவி படுகொலை! – முன்விரோதம் காரணமா?

வரும் 11-ம் தேதி சிவகங்கையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

 இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவரும், தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி, ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவருமான அரசியல் தலைவர், சுதந்திரப் போராட்டத் தியாகி திரு. இம்மானுவேல் சேகரனின் 66-ஆவது நினைவு நாள் 11.9.2023 அன்று அனுசரிக்கப்படுகிறது.

இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 11ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவு பிறப்பித்துள்ளார். விடுமுறை அளிக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 23ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.