அரசு பள்ளியின் 2வது மாடியிலிருந்து குதித்து 11ம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி

 
suicide

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவி 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவியை பொதுமக்கள் காப்பாற்றினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலை! | India  News in Tamil

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவாரங்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது களியனூர் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி நிர்மலா என்பவர் பள்ளி வளாகத்தின்  2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது மாணவியை பார்த்த சக மாணவிகள் கூச்சலிட்டு சத்தம் போட்டதை கேட்டு பொதுமக்களில் சிலர் மாடியின் பின் வழியாக ஏறி குதிக்க முயன்ற மாணவியை தடுத்து நிறுத்தி பிடித்தனர். 

அதன் பின்னர் மாணவியை பாதுகாப்பாக தலைமையாசிரியர் அறைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்தியதில்  மாணவியின் சிகை அலங்காரம் மற்றும் நடைபாவணங்கள் வைத்து சக மாணவிகள் கிண்டல் கேலி செய்வதாக தெரிவித்தார். இதற்கிடையே மாணவிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது மாணவிகளை ஆசிரியர்கள் தவறாக பேசுவதாகவும் கண்டிப்பதாகவும் ஆசிரியைகள் மீது மாணவிகள் புகார் தெரிவித்தனர். இதன் பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மாணவிகளை கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.