11ம் வகுப்பு மாணவி 8 மாத கர்ப்பம் - 60 வயது முதியவர் போக்சோவில் கைது

 
xzc

பதினொன்றாம் வகுப்பு மாணவி 8 மாத கர்ப்பமாக இருப்பதால் 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  

 நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் அடுத்த மேங்கோ ரேஞ்ச்.   இப்பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர்.  60 வயதான இந்த முதியவர் அதே பகுதியில் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறார்.   இதில் அந்த மாணவி 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார்.

su

 தற்போது தான் பெற்றோர்களுக்கு மாணவியின் நிலை தெரிய வந்திருக்கிறது.   உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மகளை பரிசோதிக்கச் சொல்லியிருக்கிறார்கள்.   மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்கள். 

 8 மாத கர்ப்பம் என்பதால் கருவை கலைக்க முடியாது என்பதால் பெற்றோர்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.   உடனே மருத்துவர்கள் தேவாலா அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்திருக்கிறார்கள்.   போலீசார் அங்கு வந்து மாணவியிடம் விசாரணை நடத்தியதில்,  அவரின் கர்ப்பத்திற்கு காரணம் முதியவர் சுதாகர் என்பது தெரியவந்திருக்கிறது.

 இதையடுத்து முதியவர் சுதாகரை போக்சோ  சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.