விருத்தாசலம் அருகே தாய் திட்டியதால் 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

 
suicide

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் லாரி டிரைவர் இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் இவர்கள் இரண்டு பேரும் விருத்தாச்சலம் ஜங்ஷன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர் தேவிகா  பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

விருத்தாச்சலத்தில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை: எதிர்பார்த்த மதிப்பெண்  கிடைக்காததால் விபரீத முடிவு

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் சிவகுமார் மனைவி ஷீலா மகள் தேவிகா மகன் மோகன் ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்ததாக தெரிய வருகிறது. இந்த நிலையில் தாய் ஷீலா மகள் தேவிகாவை சரியாக படிக்கவில்லை என்றும்  வீட்டு வேலையும் சரியாக செய்யவில்லை எனவும் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த தேவிகா வீட்டின் அறையின் உள்ளே சென்று அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெகு நேரம் ஆகியும் தேவிகா வராதால் பின்னர் ஷீலா அறையில் சென்று பார்க்கும் போது தேவிகா மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது பின்னர் அக்கம் பக்கத்தினர் தேவிகாவை உடலை இறக்கினர் இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலிசாருக்கு தகவல் கொடுத்தனர் அதன் பேரில் தேவிகா உடலை போலீசார் கைப்பற்றி விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் தொடர்ந்து விருத்தாசலம் பகுதியில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது.