11ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை - சிவகாசியில் நடந்த சோகம்!!

 
suicide

அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

suicide

கடந்த சில வாரங்களாகவே மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அடுத்தடுத்து நிகழ்ந்து நம்மை உருக்குலைய செய்கிறது.  கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர்  தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். இப்படி மாணவிகளின் அதிர்ச்சிகரமான ள் முடிவுகளில் இருந்து நாம் மீண்டு வருவதற்குள் அடுத்த நிகழ்வு சிவகாசியில் அரங்கேறி உள்ளது.

suicide

 சிவகாசி அய்யம்பட்டி என்னும் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி நேற்று காலையில் பள்ளிக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய நிலையில் பள்ளி சீருடை உடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவகாசி போலீசார் மாணவியின் உடலின் மீது பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  மாணவியின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.