#BREAKING சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 1,150 பேர் ராஜினாமா!

 
s

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் 1150 பேர் ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ அர்ஜூனன் உட்பட சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களும், விழுப்புரம் அதிமுக நிர்வாகிகளுமான 1,150 பேர் தங்களின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து விலகினர். தங்களது ராஜினாமா கடிதங்களை அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் வழங்கினர். தலைமை சரியில்லாததால் ராஜினாமா செய்ததாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். சி.வி.சண்முகத்துக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்காததால் மாவட்ட நிர்வாகிகள் ஆவேசமடைந்து இத்தகைய முடிவை எடுத்துள்ளனர்.இப்படிப்பட்ட நிர்வாகி கூட எங்களால பயணிக்க முடியாது.. தகுதி இல்லாதவருக்கு பதவியா? கட்சியில் இருந்து சி.வி.எஸ்ஸை நீக்கியது ஏன்? நாங்க அனைவரும் ராஜினாமா செய்ய போகிறோம். அ.தி.மு.க தலைமை சரியில்லை. நாங்க கட்சியில இருந்து போகனும்னு போகல, அம்மாவின் ஆத்மா என்னைக்கும் எங்க கிட்ட தான் இருக்கும்... கட்சிக்காக உழைச்ச அவர அவன் இவன்னு சொல்வதா? இதான் அரசியல் நாகரிகமா?  என சி.வி.எஸ் ஆதரவாளர்கள் செய்தியாளர்களிடம் தங்களது மனக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.