வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு
கண்டாச்சிபுரம் அருகே வீட்டில் தனியாக விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ளது கெங்கவரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகவேல். இவரது மனையி சத்யா கண்டாச்சிபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள தனது தாய்வீட்டிற்கு வந்துள்ளார். இவர்களுக்கு சொந்தமான இரண்டு கூரை வீட்டில் ஒரு வீட்டில் சத்யா உறங்கி ருததாகவும், மற்றொரு வீட்டில் 11 வயதான தனது மகள் வர்ஷினி விளையாடிக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து வர்ஷினியின் தாய், மகளைக் காணவில்லை என தேடி உள்ளார். அப்போது வர்ஷினி மற்றொரு வீட்டில் உதட்டில் காயங்களுடன் வலையல்கள் உடைக்கப்பட்ட நிலையில் சடலமாக இருந்துள்ளார்.
இது குறித்து உடனடியாக கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் அங்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மமான முறையில் சிறுமை உயிரிழந்த சம்பவம் கண்டாச்சிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

