11 வகை மதுபானங்களுக்குத் தடை! இதோ முழு லிஸ்ட்

 
tasmac

FSSAI அறிவுறுத்தல் படி தமிழகத்தில் 11 மது வகைகளை விற்பனை செய்ய தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

11 மது வகைகளில் இயற்கையான சுவையை ஒத்த மற்றும் செயற்கையான சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, FSSAI-யின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், குறிப்பிட்ட தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துமாறும், மேலும் 'M/s Enrica Enterprises Private Limited'-ன் தயாரிப்புகளை நுகர்வோருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று விநியோகஸ்தர்கள்/மொத்த விற்பனையாளர்கள்/சில்லறை விற்பனையாளர்களுக்குத் தகுந்த அறிவுறுத்தல்களை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.  

 'M/s Enrica Enterprises Private Limited'-ன்  11 பிராண்டுகளை டிப்போவிலிருந்து RV கடைகளுக்கு இடமாற்றம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். 'M/s Enrica Enterprises Private Limited'-ன் மேற்கூறிய 11 பிராண்டுகளை FL2 மற்றும் FL3 உரிமம் பெற்றவர்களுக்கு விற்பனை செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும். அடுத்த உத்தரவு வரும் வரை, RV கடைகளில் 'M/s Enrica Enterprises Private Limited'-ன் 11 பிராண்டுகளை விற்பனை செய்யக்கூடாது.

தடை செய்யப்பட்ட மது வகைகள்

  • LOUIS VERNANT XO BLENDED PREMIUM BRANDY
  • Mc Dowells VSOP Brandy (Blended Brandy)
  • NO.1 McDowells Fine Brandy (Indian Brandy)
  • MENSCLUB Deluxe Brandy (Indian Brandy)
  • HONEY BEE FINE Brandy (Indian Brandy)
  • ENRICA VSOP SELECT BRANDY
  • ENRICA PLATINUM RESERVE XO BRANDY
  • ENRICA PREMIUM FRENCH BRANDY
  • VEERAN SPECIAL BRANDY
  • ENRICA OLD INDIE CLASSIC DARK RUM