ஜெயலலிதாவின் 11 ஆயிரம் சேலைகள் ஏலம்

 
j

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 11000 சேலைகள் மற்றும் 750 ஜோடி காலணிகள் உள்ளிட்டவற்றை ஏலமிட  கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து அவர் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் எல்லாம் தமிழ்நாடு மற்றும் வழக்கு நடந்த கர்நாடக மாநில கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.   கடந்த 26 ஆண்டுகளாக அவை கருவூலத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன .

k

போயஸ் கார்டனில் இருந்து கைப்பற்றப்பட்ட 11 ஆயிரத்து 344 சேலைகள்,  780 ஜோடி காலணிகள்,  91 கைக்கடிகாரங்கள் , விலை உயர்ந்த பொருட்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட 146 நாற்காலிகள்,   44  குளிர்சாதன பெட்டிகள் , 700 கிலோ வெள்ளி வெள்ளி பொருட்கள்,  தங்கம் ,வைரம் ,மரகதகங்கள், ரூபி, முத்துக்கள், ரத்தின கற்கள் ஆகியவை கொண்டு  செய்யப்பட்ட  168 ஆபரணங்கள்,   ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 514 ரூபாய் ரொக்கம் உட்பட 57 வகையான உடமைகள் இரண்டு மாநில கருவூலங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன.

 இவை அத்தனையும் வீணாக மடிந்து போகிறது.  அதனால் இவற்றை ஏலம் விட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அவற்றை ஏலம் விட உத்தரவிட்டுள்ளது . கர்நாடக சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.