சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்
Jun 2, 2026, 20:18 IST1780411719860
சென்னையில் 11 காவல் ஆய்வாளர்கள் மாற்றம். காவல் ஆய்வாளர்களை மாற்றம் செய்து காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டிவருகின்றனர்.தமிழ்நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கை பலப்படுத்தவும், நிர்வாக காரணங்களுக்காகவும் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். அந்தவகையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் 11 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்துள்ளார். மேலும், மேலும், சில ஆய்வாளர்கள் காத்திருப்போர் பட்டியலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

