ரூ.3.2 கோடி வழிப்பறி - பாஜக நிர்வாகி கைது ​​​​​​​

 
அச் அச்

கேரளாவில் கண்டெய்னர் லாரியிலிருந்து 3.24 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கொல்லம் -கோயமுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னரில் இருந்த ரூ.3.24 கோடி கடந்த மாதம் 30 ஆம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது. ஆலப்புலாவை சேர்ந்த நகைக்கடை அதிபரின் பணம் வழிப்பறி செய்யப்பட்டது. கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு காரை திருப்பூரில் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் திருவாரூர் நகர பாஜக நிர்வாகிக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய கேரள மாநில தனிப்படை போலீசார், கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய திருவாரூர் நகர் பாஜக இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த 2 பேர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.