இத்தாலி சொகுசு காருக்கு ரூ.11.5 லட்சம் நுழைவு வரி- ஐகோர்ட் சென்ற ஹாரிஸ் ஜெயராஜ்

இத்தாலியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காரின் நுழைவு வரிக்கான அபராதம் செலுத்தும்படி தமிழக அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கடந்த 2010ம் ஆண்டு மசராட்டி எனும் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்தார். அதை தமிழகத்தில் ஓட்டுவத்ற்கு ஏதுவாக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்தார். னால், இறக்குமதி செய்யப்பட்ட வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்தவில்லை எனக் கூறி பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகம் மறுத்து விட்டது. இதன்பின்னர் 13 லட்சத்து 7 ஆயிரத்து 923 ரூபாய் நுழைவு வரி செலுத்தும்படி கடந்த 2019ம் ஆண்டு போக்குவரத்து துறை நோட்டீஸ் அனுப்பியது. அவ்வாறு செலுத்தாவிட்டால் வங்கி கணக்கு மற்றும் சொத்துகள் முடக்கம், வழக்கு நடைமுறை, கைது போன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது.
இதை நோட்டீசை எதிர்த்த வழக்கில் 2019ஆம் ஆண்டு முதல் அபராதத்துடன், நுழைவு வரியை செலுத்தும்படி தனி நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் செலுத்தும்படி தமிழக அரசு அனுப்பியுள்ள நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி ஹாரிஸ் ஜெயராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.அந்த மனுவில், கடந்த 2012 ஜூலை மாதம் விற்கப்பட்ட காருக்கான நுழைவு வரியாக 11 லட்சத்து 50 ஆயிரத்து 952 ரூபாய் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும், நுழைவு வரி தொடர்பான வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, பல வழக்குகளில் நுழைவு வரியை மட்டும் செலுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், தன்னை போன்ற சிலருக்கு மட்டும் அபராதத்துடன், நுழைவு வரி செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு condone delayவிற்காக நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் ஹாரிஸ் ஜெயராஜ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியம் ஆஜரானார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.