#BREAKING முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் 11 பேருக்கு வாந்தி, மயக்கம்
Jul 30, 2026, 20:30 IST1785423618600
முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஈசிஆர் சாலையில் முதலமைச்சர் விஜய் செல்லும் வழியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் 11 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்களது பட்டாலியன் கம்பெனி உணவகத்திலிருந்து வந்த சிக்கன் பிரியாணியை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உணவில் பல்லி கிடந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காவலர்கள் அவசரமாக மீட்கப்பட்டு திருவான்மியூர் மாநகராட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அனைவரும் உடல் நலத்துடன் இருக்கின்றனர்.

