10ம் வகுப்பு பொதுத்தேர்வை சரியாக எழுதாத மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

 
suicide

பொதுத்தேர்வை சரியாக எழுதாததற்கு பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த திங்கள் கிழமை வெளியாகின. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில்  மாணவர்கள் 91.45% , மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.  இந்த ஆண்டும் வழக்கம்போல  மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி  மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது. திருப்பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. இதனை தொடர்ந்து வருகிற 19ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியாகிறது. அடுத்ததாக 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன. 

இந்நிலையில், பொதுத்தேர்வை சரியாக எழுதாததால் நாமக்கல்லில் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் பழைய ஆர்.டி.ஓ. அலுவலக பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் விக்னேஸ்வரன்  10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருந்தார். இந்தநிலையில் விக்னேஸ்வரன் ஒழுங்காக படிக்கவில்லை எனவும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வையும் ஒழுங்காக எழுதவில்லை என பெற்றோர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விக்னேஷ்வரம் வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.