10ஆம் வகுப்பு தேர்வெழுத்திய மாணவி தற்கொலை
அந்தியூர் அருகே பர்கூர் மலை கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி எலச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கல்யாணி (15), கல்யாணி அங்குள்ள அரசு பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் தற்போது பொது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி உள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை வீட்டிலிருந்து அருகில் உள்ள தாமரைகரை கிராமத்திற்கு சென்று விட்டு மீண்டும் தங்களது ஊருக்கு வந்துள்ளார், இதற்கு அவரது அம்மா ராஜி எதற்காக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று பேசிவிட்டு ஆடு மேய்க்க சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதியம் சுமார் 2 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது கல்யாணி வாந்தி எடுத்துக் கொண்டிருந்துள்ளார், தொடர்ந்து இதுகுறித்து ராஜி தனது மகள் கல்யாணிடம் கேட்டபோது பூச்சிக்கொல்லி பவுடரை குடித்துவிட்டதாக கூறி மயங்கியுள்ளார், இதை அடுத்து அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர், அப்போது அங்கு கல்யாணியை பரிசோதித்த மருத்துவர்கள் கல்யாணி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இது எடுத்து கல்யாணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே கல்யாணியின் தற்கொலை குறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

