10th ரிசல்ட் : அதிகம் மட்டும் குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்..!!
Updated: May 20, 2026, 10:14 IST1779252283337
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியான நிலையில் ஒட்டுமொத்தமாக 94.31% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 93.80% ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது 0.51% உயர்ந்துள்ளது.
2025ல் 8,71,239 பேர் தேர்வு எழுதி 8,17,261 (93.80%) பேர் தேர்ச்சி பெற்றனர்; இந்த ஆண்டு 8,70,643 பேர் தேர்வு எழுதி 8,21,105 (94.31%) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிக தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்:
தேர்ச்சி விகிதத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
புதுக்கோட்டை – 97.57%
சிவகங்கை – 97.54%
தஞ்சை – 97.41%
திருச்சி – 97.31%
கன்னியாகுமரி – 97.30%
குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்:
மாநில அளவில் ராணிப்பேட்டை மாவட்டம் குறைந்த தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
ராணிப்பேட்டை – 86.58%
அரியலூர் – 87.55%
விழுப்புரம் – 87.77%
கிருஷ்ணகிரி – 89.43%
திருவண்ணாமலை – 90.46%
அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.34% ஆகப் பதிவாகியுள்ளது.
தனியார் பள்ளிகள் வழக்கம் போல் தங்களது சிறப்பான ஆதிக்கத்தை நிலைநிறுத்தி 98.14% தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளன.

