#Breaking 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது!

 
school

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.

school

தமிழகத்தில் 10 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. 11ஆம் வகுப்பு பொது தேர்வு மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடந்தது. பத்தாம் வகுப்பு தேர்வை சுமார் 9 லட்சம் மாணவர்களும் , 11ம் வகுப்பு தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்களும் எழுதினர்.
இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கி மே 4ம் தேதி நிறைவடைந்தது.

School Education

இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் .  பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும். அத்துடன் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.