10ம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது!

 
school

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது. 

School Education

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10, 12ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்றது. இதையடுத்து கடந்த மாதம் மாணவர்கள் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.  அதன்படி மாணவர்கள்  மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகலை பெறுவதற்காக கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர்.  

school

இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மறு கூட்டல் முடிவுகள் இன்று வெளியாகிறது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடப்பாண்டில் கடந்த மே மாதம் தேர்வு நடைப்பெற்ற நிலையில்  மறுகூட்டல் முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது.  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று மாணவர்கள் தங்கள் விவரங்களை பயன்படுத்தி மறுகூட்டல் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மறுகூட்டல் புதிய மதிப்பெண் சான்றிதழையும்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தனது அறிவிப்பில் தேர்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.