தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
May 16, 2025, 09:19 IST1747367357580
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இன்று காலை 9 மணிக்கு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை காலை 9 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். அதன்படி பத்தாம் வகுப்பில் மொத்தம் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 95.88 சதவீதம் மாணவிகளும், 91.74 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளம் மூலமாக மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


