10ஆம் வகுப்பில் தேர்ச்சியடைந்த மாணவர்கள் - ஓபிஎஸ், தினகரன் வாழ்த்து

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஓபிஎஸ், தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி சதவீதம் 91.39 ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710 ஆகவும், மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904 ஆகவும் பதிவாகியுள்ளது.அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45% ஆகவும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 % ஆகவும், தனியார் பள்ளிகள் 97.38% தேர்ச்சி பெற்றுள்ளன.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 19, 2023
மேலும் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இயல்பானது என்பதைப் புரிந்து கொள்வதுடன், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் துணைத்தேர்வு எழுதி…
மேலும் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இயல்பானது என்பதைப் புரிந்து கொள்வதுடன், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன். என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
— TTV Dhinakaran (@TTVDhinakaran) May 19, 2023
மேலும் வாழ்க்கையில் வெற்றி, தோல்வி இயல்பானது என்பதைப் புரிந்து கொள்வதுடன், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் துணைத்தேர்வு எழுதி…
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
— O Panneerselvam (@OfficeOfOPS) May 19, 2023
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் உயரிய நிலையை அடையவும், ஒருசில காரணங்களால் தேர்ச்சி அடையாதவர்கள் உடனடித் தேர்வில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று சிறக்கவும் எனது வாழ்த்துகள். #10thResult
அதேபோல் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
வெற்றி பெற்றவர்கள் அனைவரும் உயரிய நிலையை அடையவும், ஒருசில காரணங்களால் தேர்ச்சி அடையாதவர்கள் உடனடித் தேர்வில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று சிறக்கவும் எனது வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.