10ம் வகுப்பு பொதுத்தேர்வில் வழக்கம்போல் அசத்திய மாணவிகள்! மிரண்டுபோன பள்ளிக்கல்வித்துறை

 
cbse exams

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வில் 91.55 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், மாணவர்களை விட 5.95% மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா தெரிவித்துள்ளார்.

In Thiruvannamalai 88.28 percent students passed | திருவண்ணாமலையில் 88.28  சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

 

பத்தாம் வகுப்பு பொது தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 12,625 உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடை 4 லட்சத்து 47 ஆயிரத்து 61 மாணவிகளும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களும் என எட்டு லட்சத்து 94 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 18, 743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி சதவீதம் 91.55 என உள்ளது. இவர்களில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 591 மாணவியர்கள் 94.53 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 4 லட்சத்து 47 ஆயிரத்து 203 மாணவர்களில் 3 லட்சத்து 96 ஆயிரத்து 152 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் தேர்ச்சி சதவீதம் 88.58 என உள்ளது. மாணவர்களை விட 5.95 சதவீதம் மாணவியர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய 9 லட்சத்து 14 ஆயிரத்து 320 மாணவர்களில் 8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்று தேர்ச்சி சதவீதம் 91.39 என இருந்தது. 4105 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 1364 பள்ளிகளில் இருந்து தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளியில் படித்த மாணவர்கள் 87. 90 சதவீதமும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 91.77 சதவீதமும், தனியார் சுயநிதி பள்ளிகள் 97.43 சதவீதமும், இருபாலர் பள்ளியில் 91. 93 சதவீதமும், பெண்கள் பள்ளிகள் 93. 80 சதவீதமும், ஆண்கள் பள்ளிகள் 83.17% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்.. வழக்கம் போல் தேர்ச்சி விகிதத்தில் சாதனை செய்த  மாணவிகள்..!

தமிழ் மொழி பாடத்தில் 8 மாணவர்களும், ஆங்கிலம் பாடத்தில் 415 மாணவர்களும், கணக்கு பாடத்தில் 20 ஆயிரத்து 691 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 5104 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 4428 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 13510 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 12491 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 260 சிறைவாசிகள் தேர்வு எழுதியதில் 228 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களில் அரியலூர் மாவட்டம் முதலிடம் 97.31%, இரண்டாவது இடம் சிவகங்கை மாவட்டம் 97.02 %, மூன்றாவது இடம் ராமநாதபுரம் 96.36 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். 82.07 சதவீதம் மட்டுமே தேர்ச்சி விகிதம் பெற்று வேலூர் மாவட்டம் கடைசி இடம் பெற்றுள்ளது.