10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

 
tn

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது.

school

2022-23 ஆம் கல்வியாண்டின் பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது.  தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வை  9 லட்சத்து 38 ஆயிரத்து 291 மாணவர்கள் எழுதினர். அதேபோல 11ஆம் வகுப்பு பொது தேர்வினை  8 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் எதிர்கொண்டனர். 

school

இந்நிலையில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது.  நாளை காலை 10 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும்,  மதியம் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட உள்ளன.  தேர்வு எழுதிய மாணவர்கள்  www.tnresults.nic.in www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்களது பதிவின் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.