இன்று முதல் 108° F வெயில் கொளுத்தும் - சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

 
pradeep

வருகிற  30 ஆம் தேதி வரை  அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். 26.05.2024; அடுத்த 24 மணி நேரத்திற்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/இயல்பை விட சற்று குறையக்கூடும்.

summer

இன்று அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். 28.05.2024 முதல் 30.05.2024 வரை: அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும் / இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தனது முன்னறிவிப்பில்  கூறியிருந்தது. 

tn

இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் 108° F வெயில் கொளுத்தும்.  மற்ற மாவட்டங்களில் வெயில் சற்று குறைந்து காணப்படும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.