தமிழகம் முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்..!

 
1

சென்னை உயர்நீதிமன்ற தலைமைப் பதிவாளார் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்னையில் நீதிபதிகள் 7 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னை சிறு வழக்குகளுக்கான பதிவாளர் டி. சோபாதேவி, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் முனிசிப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்ற நீதிபதி லாவண்யா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சைதாப்பேட்டை செக் மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்ற நடுவர் வானதி, பூந்தமல்லி நீதித்துறை நடுவர் ஸ்டாலின் உள்ளிட்ட சிவில் நீதிபதிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் நீதித்துறை நடுவர் வைஷ்ணவி, ஆலந்தூர் நீதிமன்ற நீதித்துறை நடுவர் ஏ.கே.என்.சந்திரபிரபா, ஆலந்தூர் கூடுதல் மாவட்ட முன்சீப் நித்தியா, ஆலந்தூர் முதன்மை மாவட்ட முன்சீப் முருகன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.