நீரிழிவு நோயால் 10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டதாக தகவல்

 
school school

புதுச்சேரியில் நீரிழிவு நோயால் 10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Puducherry School Holidays: Authorities Announce To Shut School For  Students Of These Classes Following Bandh - Oneindia News

புதுச்சேரியில் 2023-24 கல்வியாண்டில் 10,000 மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியிருப்பதாக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் டைப்- 2 நீரிழிவு நோய் ஏற்படுவது குறித்து மாணவர்கள் மிகுந்த கவலையில் இருப்பதாகவும், அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கு முன்னெடுப்பை மேற்கொள்ளவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அதிக சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீதான மாணவர்களின் நுகர்வு காரணமாக ஆரோக்கியமான உணவு பழக்கங்கள் குறைந்துள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே பதப்qபடுத்தப்பட்ட உணவு மீதான மாணவர்களின் தொடர்பை குறைக்கவும், ஒட்டுமொத்தமாக ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தழுவவும் ஒருங்கிணைக்கும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் பரிந்துரைக்கப்பட்ட சர்க்கரை அளவு, ஆரோக்கியமற்ற உணவுகளில் உள்ள சர்க்கரை அளவு, ஜங்க் புட், குளிர்பானங்கள் ஆகியவை மூலம் அதிகபடியான சர்க்கரை  உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக்கொண்டுள்ளார்.