கபினியில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி நீர் திறப்பு! தமிழ்நாட்டுக்கு ஓரிரு நாட்களில் வந்துசேரும்
கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து நொடிக்குப் பத்தாயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பை அடுத்து காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் கபினி அணை நிரம்புகிறது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று ஆணையம் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டது. கபினி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

