ஒரே வாரத்தில் 10,000 கோழிகள் பலி! கோழிப்பண்ணைகளில் பரவும் விசித்திர நோய்...!

broiler chicken - தீபாவளி பண்டிகையையொட்டி  சென்னையில் குவிக்கப்படும் கறிக்கோழிகள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருச்சோபுரம், தம்மனாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில், கடந்த இரண்டு மூன்று நாட்களில் ஏராளமான கோழிகள் திடீரென உயிரிழந்துள்ளன. இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோழிகள் அடுத்தடுத்து உயிரிழப்பது குறித்து கடலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் முருகவேல் தலைமையில், உதவி இயக்குநர் வெங்கடலட்சுமி, கால்நடை மருத்துவத் துறை அலுவலர்கள் ஆகியோர், தம்மனாம்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு நேரில் சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, கோழிகள் வளர்க்கப்படும் முறை, பண்ணைகளின் சுற்றுப்புறச் சுகாதாரம், கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனம் மற்றும் குடிநீர் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "கோழிகள் திடீரென உயிரிழப்பதற்கான காரணத்தைக் கண்டறிய பண்ணைகளில் இருந்து தேவையான மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளன.

கோழிகளுக்கு ஏதேனும் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதா, அல்லது பருவநிலை மாற்றம் காரணமாக உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா? அல்லது பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதா என்பது குறித்து பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே முழுமையாகத் தெரியவரும்" என்று தெரிவித்தனர்.