நெசவாளர்களுக்கு 1,000 யூனிட் மின்சாரம் இலவசம்

 
mkstalin

தமிழகத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் ஆயிரம் யூனிட்டாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சென்னிமலையில் வரும் 7-ம் தேதி விசைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரமும், விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மாதம் 700 யூனிட் மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டுவந்தது. பொதுமக்களுக்கு மாதந்தோறும் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. இந்த அளவு மார்ச் ஒன்றாம் தேதி முதல் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

அதில், கைத்தறி நெசவாளர்களுக்கான மின்சாரம் மாதம் 300 யூனிட்டாகவும், விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கான இலவச மின்சாரம் மாதம் 1000 யூனிட்டாகவும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த இந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.