தமிழ்நாட்டில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்!!

 
govt

தமிழகத்தில் சளி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம்  முழுவதும் இன்று ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு எடுத்துள்ளது. 
புதுச்சேரியிலும் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 25ந்தேதி வரை புதுச்சேரி அரசு விடுமுறை அளித்துள்ளது.அதேபோல் தமிழகத்திலும்  விடுமுறை அளிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

masu

பருவமழைக்கும் முன்பாக இதுபோன்ற காய்ச்சல் வருவது வழக்கமான ஒன்று. தமிழ்நாடு முழுவதும் முழுவதும் சளி காய்ச்சல் பற்றி தற்போது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றத்தின் போது காய்ச்சல் ஏற்படுவது சற்று அதிகரிக்கும்.  h1 n1 பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 1166 ஆக உள்ளது. பருவமழை தொடர்வதற்கு முன்பாக கூடுதல் முகாம்களின் நடத்த இதனால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இந்த காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள்.பொதுமக்கள் காய்ச்சல் அல்லது அதற்கான பாதிப்பு இருந்தால் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

dengue
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மற்றும் அதற்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள இடங்களில்  100 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும்.இதன் மூலம் பருவ கால காய்ச்சல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.