பரந்தூரில் 1,000 ஏக்கர் நிலம் கையகம்
Nov 5, 2025, 17:43 IST1762344814722
பரந்தூரில் 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.400 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக போராட்டம் தொடரும் நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைக்க அரசுக்கு நிலத்தை தர சம்மதம் தெரிவித்து 5 கிராமங்களை சேர்ந்த 19 நில உரிமையாளர்கள் நிலம் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் பரந்தூரில் மொத்தம் 3,700 ஏக்கரில் விமானநிலையம் அமைய உள்ள நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 1000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.400 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியர் கூறியுள்ளார்.


