இனி 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்படாது: அரசாணை வெளியீடு..!!
சார்பதிவாளர்களின் வேலைப் பளுவை குறைக்கும் நோக்கில், சனிக்கிழமைகளில் செயல்படும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் எனவும், சனிக்கிழமை கட்டாயப்பணி முறை கைவிடப்படும் எனவும் தமிழக சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து செய்யப்படுவதாகவும், வருகையில்லா ஆவணப்பதிவு விரிவாக்கம் செய்யப்படுவதால் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், 100 சார் பதிவாளர் அலுவலகங்களும் இனி வார நாட்களில் மட்டும் செயல்படும் என்றும், சார்பதிவாளர்களின் பணிச்சுமையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் சனிக்கிழமைகளில் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 100 சார்பதிவாளர் அலுவலகங்களில் இருந்த சனிக்கிழமை கட்டாயப் பணி கைவிடப்படுகிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் அறிவித்த நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

