"1,026 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி " - பள்ளிகல்வித்துறை

 
school

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 1,026 அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.

school

பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.  மொத்தம் தேர்வு எழுதிய 9 லட்சத்து 14,320 மாணவ மாணவிகளில்  8 லட்சத்து 35 ஆயிரத்து 614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதன் மூலம் தேர்ச்சி விகிதம் 91.31 சதவீதமாக பதிவாகியுள்ளது.  மாணவிகள் 94.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் மாணவர்கள் 88.16 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

school

இந்நிலையில் தமிழகத்தில் 12,638 பள்ளிகளை சேர்ந்தவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 87.45 சதவீதமாக உள்ளது.  அரசு உதவி பெறும் பள்ளிகள் 92.24 சதவீதமும் தனியார் பள்ளிகள் 97.38 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன. குறிப்பாக 3718 பள்ளிகள்  100% தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் அரசு பள்ளிகள் 1026 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன.