கனமழையால் 100 ஆடுகள், 1,000 கோழிகள் பலி

 
ச் ச்

இராஜபாளையம் அருகே இரவில் பெய்த கன மழை காரணமாக தனியார் அரிசி ஆலை மதில் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி ரூ. 30 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார். ஊருக்கு வெளியே கிடை போட்டு பராமரித்து வந்த நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் ஊருக்குள் உள்ள தனது சொந்த நிலத்தில் கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். 

தமிழகம் முழுவதும் தற்பொழுது வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில்,  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார நேற்று இரவு சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது. மழை பெய்த போது முருகன் ஆடுகளை பராமரித்து வந்த இடத்தின் அருகே இருந்த தனியார் அரிசி ஆலையின் மதில் சுவர் இடிந்து ஆடுகளின் மேல் விழுந்தது. இந்த இடுப்பாடுகளுக்குள் சிக்கி ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக பலியானது. அதேபோல தேனி மாவட்டம் தேவாரம் மூணாண்டிப்பட்டி பகுதியில் கோழிப்பண்ணைக்குள் மழைநீர் புகுந்து ஆயிரக்கணக்கான கோழிகள் பலியானது.