தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்... அவதிப்படும் மக்கள்!!

 
tn

தமிழகத்தில் நேற்று பல மாவட்டங்களில்  சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.

summer

வளிமண்டல கீழடுக்கு மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று தமிழகத்தில் சேலம் ,நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ,திருநெல்வேலி மாவட்டங்கள் , மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய ஈரோடு ,கரூர் ,திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  நாளை மற்றும் நாளை மறுநாள் தென்தமிழகம் மற்றும் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 2ம் தேதி தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

rain

இந்நிலையில் தமிழகத்தில் 8 நகரங்களில் நேற்று  100 டிகிரியை வெயிலின் தாக்கம் தாண்டியது.  அதிகபட்சமாக வேலூர்,  திருச்சியில் 104 டிகிரியும் ,கரூரில் 103 டிகிரி வெயில் கொளுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 102 டிகிரி,  மதுரையில் 102டிகிரி, தஞ்சாவூரில் 100 டிகிரி , வெயில் வாட்டி வதைத்தது. சென்னை, தர்மபுரி, பாளையங்கோட்டை, சேலம்,  உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. சென்னையை பொருத்தவரை மீனம்பாக்கத்தில் 99 டிகிரி,  நுங்கம்பாக்கத்தில்  96 டிகிரி வெப்பம்  மக்களை வாட்டி வதைத்தது எனலாம்.இதனால் மக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என்றும், அப்படியே சென்றாலும் கூட குடை, தண்ணீர் பாட்டில், முகத்தில் துணியை கட்டிக்கொண்டு வெளியில் செல்லுங்கள் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.